[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

குடும்பத் தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை

worker-killed-in-family-dispute

ஈரோடு அருகே குடும்பத் தகராறில் விசைத்தறி தொழிலாளியை உறவினர்கள் அடித்து கொலை செய்த வீடியோ வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோட்டை அடுத்த பெரியசேமூர் கல்லாங்காட்டைச் சேர்ந்தவர் செல்வகுமார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினரான லட்சுமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவரைப் பிரிந்து சங்ககிரிக்குச் சென்ற லட்சுமியை இரண்டு நாட்களுக்கு முன்பு செல்வகுமார் உள்ளிட்ட உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது லட்சுமிக்கும் செல்வகுமாருக்கும் இடையேயான பழைய பகை முற்றியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த செல்வகுமாரை வழிமறித்து லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் உருட்டுகட்டையால் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். செல்வகுமார் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. செல்வகுமாரை தாக்கி கொலை செய்ததாக லட்சுமி மற்றும் 4 பெண்கள் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close