[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்
  • BREAKING-NEWS அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக, புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்- இந்திய வானிலை ஆய்வு மையம்

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது - தமிழக அரசு 

we-can-not-give-place-for-karunanidhi-modesty-in-marina-tn-govt

சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இயலாது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறுகையில், “ அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியிடன் உடலை அடக்கம் செய்ய செயல் தலைவர் ஸ்டாலின் சார்பில் வேண்டுகோள் மனுவை முதலமைச்சரிடம் கொடுத்தோம். பார்ப்போம் என்று கூறினார். இன்னும் எங்களுக்கு முழுமையான பதில் சொல்லவில்லை. பதிலை எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றார். 

இதனையடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினாவைத் தவிர வேறு இடம் ஒதுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் அண்ணா பல்கலைக் கழகம் எதிரே உள்ள காந்தி மண்டபம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தயார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் இடம் அளிக்க முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close