[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

“நேற்றைய நிலையிலேயே கருணாநிதி இன்றும் இருக்கிறார்” - ஸ்டாலின்

mk-stalin-about-dmk-leader-karunanidhi-health-condition

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, நேற்று வெளியான அறிக்கையின்படி சீராக உள்ளது என்று செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேற்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “கருணாநிதியின் உடல்நிலையில் முதலில் பின்னடைவு ஏற்பட்டது, இருப்பினும் மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராகி வருகிறது. கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

                    

இதனையடுத்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. இருப்பினும், மருத்துவமனை சார்பாக அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் இருவரும் இரவு 9.30 மணியளவில் புறப்பட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘கருணாநிதியின் உடல்நிலை, நேற்று வெளியான அறிக்கையின்படி சீராக உள்ளது’ என்றார். 

அதேபோல், ‘என்னைப் போலவே கருணாநிதி இருக்கிறார். கருணாநிதியின் உடல்நிலை எந்த மாறுதலும் இல்லாமல் நேற்றைய நிலையிலேயே இருக்கிறது. தொண்டர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.’என்று துரைமுருகன் கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close