[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

கணவரையே கடத்த முயன்ற மனைவி

the-wife-has-tried-to-kidnap-her-husband-for-the-property-in-namakkal

நாமக்கல்லில் சொத்துக்காக கணவரையே ஆள் வைத்து கடத்த முயன்ற மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் ஏ.எஸ் பேட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வராஜ். லாரி தொழில் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவருக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பு கரூரை சேர்ந்த இராஜேஸ்வரி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை நாமக்கல்-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த செல்வராஜை, 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சொத்துகளை ராஜேஸ்வரி பெயருக்கு எழுதி வைக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிய செல்வராஜ், இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்மந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் சொத்துக்காக செல்வராஜை கடத்த ராஜேஸ்வரியும் அவரின் சகோதரி கலாராணியும் கூலிப்படை வைத்து கடத்த முயன்றதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான ராஜேஸ்வரி மர்றும் கலாராணி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close