போராட்டம் தேவை, ஆனால் எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அடிப்படை உரிமைக்காக போராடலாம், ஆனால் தேவையின்றி போராடக் கூடாது என்று கூறினார். நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்க வெளிநாடுகளில் மட்டுமன்றி உள்நாட்டிலும் பல சக்திகள் இருப்பதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் கோழிப்பண்ணைகள் போன்று பள்ளிகள் செயல்படுவதாகவும், பல லட்சம் கொடுத்து மருத்துவர், இன்ஜினியர் ஆக்க வேண்டும் என பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதாகக் கூறினார். இந்தப் போக்கு தவறானது என்றும், கனவு கலையும்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.
விஷ சாராயம் குடித்து 32 பேர் உயிரிழப்பு - அசாமில் சோகம்
கடுமையான வறுமையிலும் படித்து டிஎஸ்பி ஆன சரோஜா
‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி - சொந்த சின்னத்தில் போட்டி
உலகளவில் முதலிடம் பிடிக்கபோகும் இந்திய மக்களவை தேர்தல் 2019