[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆற்றில் சிக்கிய வாயில்லா ஜீவன்கள் ! கடுமையான போராட்டங்களுக்கு பின்பு மீட்பு

the-cattle-that-are-trapped-in-the-thamirabarani-river

தாமிரபரணி ஆற்றுக்குள் அமலைச் செடியில் சிக்கிக்கொண்ட சுமார் 62-க்கும் அதிகமான மாடுகள் மீட்கப்பட்டன. மேலும் பல மாடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து திடீரென்று அதிகரித்தது. இதில், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கலியாவூரில், தாமிரபரணி ஆற்றுக்குள் சென்றுகொண்டிருந்த சுமார் 100 மாடுகள் சிக்கிக்கொண்டன. மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று வீடு திரும்பும் போது ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றுக்குள் முளைத்திருக்கும் அமலை செடிகளில் மாடுகள் சிக்கிக்கொண்டன. இதையடுத்து மாடுகளை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினருடன் அங்குள்ள பொதுமக்களும் ஈடுபட்டனர். இதில் 62 மாடுகள் மீட்கப்பட்டன. 

போதுமான அளவு மீட்பு படையினர் இல்லாததால் மீட்பு பணியை மேலும் தொடர முடியவில்லை. இதனால் மற்ற மாடுகளை மீட்பதற்காக, ஆற்றின் நீர் வரத்தை குறைக்கும் வகையில் மருதூர் அணைக்கட்டின் கீழக்கால், மேலக்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பொக்லைன் மூலம் அமலைச்செடிகளை அகற்றலாமா என்றும் ஆலோசித்து வருகின்றனர். 

சம்பவ இடத்தில் தற்போது மீட்பு பணி அதிகாரிகளுடன் கால்நடை மருத்துவ குழுவும், வருவாய் துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.

தகவல்கள் : நாகராஜ் -செய்தியாளர் ,நெல்லை

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close