[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

இணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து

leaving-tamil-out-of-route-board-proves-costly

 ஈரோடு மாவட்டத்தில் அரசு நகர பேருந்தில் இந்தியில் எழுதப்பட்டிருந்த பேருந்தின் பெயர் பலகை தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடம் எண் (17), (12)-ல் இயங்கும் அரசு நகரப்பேருந்தில் பெயர் பலகை இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. இந்தப்பேருந்தானது கவுந்தப்பாடி அரசு போக்குவரத்துக்கிளையில் இருந்து பெருந்துறை பகுதிக்கு இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்தப்பேருந்தானது அதிகாலை 5 மணிக்கு கவுந்தப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம் உட்பட சுமார் 20க்கு மேற்பட்ட கிராமங்கள் வழியாக பெருந்துறை பேருந்து நிலையம் சென்றடைகிறது. இந்தத் தடத்தில்  காலை 8 மணி, மதியம் 12.40, இரவு 7.10  மணியளவில் கவுந்தப்பாடியிலிருந்து செல்கிறது. மீதமுள்ள நேரங்களில் பெருந்துறை பேருந்து நிலையத்தில் இருந்து சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திற்கு இயக்கப்படுகிறது. இந்தப்பேருந்து சிப்காட் வழித்தடத்தில் செல்லும் போது மட்டும் தமிழில் இருந்த பெயர்ப்பலகை மாற்றப்பட்டு ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்ட பெயர்ப்பலகை பயன்படுத்தப்பட்டது. 

இந்தியில் இருக்கும் பெயர் பலகையுடன் பேருந்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவத் தொடங்கியது. தமிழகத்த்தில் உள்ள பேருந்தில் இந்தியில் எப்படி பெயர்ப்பலகை வைக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் கிராமங்கள் வழியாக செல்லும் நகரபேருந்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர்பலகை இருந்தால் கிராமவாசிகள் எப்படி பேருந்து செல்லும் வழித்தடத்தைக் கண்டறிய முடியும் என்றும் இணையதளவாசிகள் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்பு குரல் அதிகரித்தால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றி தமிழில் பெயர் பலகையை பொருத்தியுள்ளனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, பெருந்துறை சிப்காட் வளாக தொழிற்பேட்டையில் 1000க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் அப்பகுதியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குடியிருக்கின்றனர். பெருந்துறையில் நடக்கும் வாரச்சந்தைக்கு வந்து தான் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்ற காரணத்தினால் தான் இந்தியிலும்,ஆங்கிலத்திலும் பெயர் பலகை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட வழித்தடத்தை தாண்டி அந்த பெயர்ப்பலகை எப்போதும் பயன்படுத்தப்பட்டதில்லை ; மேலும் குறிப்பிட்ட அந்த பெயர்ப்பலகை போக்குவரத்து கழகம் மூலம் கொடுக்கப்பட்டதில்லை என்றும் பலகை வைத்த நடத்துனர் சீனிவாசன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதோடு ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் மற்றும் கவுந்தப்பாடி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். மேலும் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close