[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை

disproportionate-assets-case-5-years-jail-to-former-minister

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‌1991-1996 வரையிலான ஜெயல‌லிதாவின் அமைச்சரவையில் தமிழக வணிக வரித்துறை அமைச்சராக சத்தியமூர்த்தி இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சத்தியமூர்த்தி மீது புகார் வந்ததன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் முடிவில் வருமானத்திற்கு அதிகமாக 83 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு தனது பெயரிலும், தனது மனைவி சந்திரா பெயரிலும் சத்தியமூர்த்தி சொத்து சேர்த்ததாக ‌லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து விடுவித்தது.

இந்நிலையில், கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கடந்த 2011-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அப்போது, சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை நீதிபதி ரத்து செய்தார். மேலும், சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 லட்சம் ரூபாய் அபராதமும், சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சத்தியமூர்த்தி, தற்போது திமுகவில் இருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close