[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்: 7 அடுக்கு பாதுகாப்பு

president-ramnath-kovind-to-visit-tamilnadu-today

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராம்நாத் கோவிந்த் இரண்டாவது முறையாக இன்று தமிழகம் வரவுள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் காலை 10.45 மணிக்கு சென்னை வந்து சேரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்லும் அவர், ஸ்ரீபுரம் பொற்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் தரையிறங்குகிறார்.

பிறகு மதியம் 12.30 மணியளவில் சிஎம்சி மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் அவர் பங்கேற்கிறார். இதன்பிறகு சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர், மாலை 3 மணிக்கு ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கிறார். அதனையடுத்து தங்கக் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை திரும்புகிறார்.

ஆளுநர் மாளிகையில் இன்றிரவு தங்கி ஓய்வெடுக்கும் ராம்நாத் கோவிந்த், நாளை காலை 10 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கின்றார். அதன்பின் 11.55 மணிக்கு வேளச்சேரி குருநானக் கல்லூரி பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார். புதிய கட்டடங்களையும் திறந்து வைக்கும் அவர், 1.15 மணியளவில் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, சென்னை மற்றும் வேலூரில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் செல்லும் வழிகளில் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close