[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

flood-relief-row-case-filled-to-madras-high-court

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் விவகாரத்தைக் கண்காணிக்க நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அமர்வில் வழக்கறிஞர் நசருல்லா முறையிட்டார். அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, ஏழைகளே பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், அவர்களது மறுவாழ்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கோரியிருந்தார்.

அதோடு, தான் பார்வையற்றவர் என்பதால், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென்றார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கறிஞர் நசருல்லாவின் பரிந்துரை கடிதத்தை நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close