[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

காவிரி விவகாரம்: முதல்வருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு

chief-minister-eps-talks-on-phone-with-rajnathsingh-about-cauvery-management-board

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பில், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்த நீரின் அளவை விட குறைவே ஆகும். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும். இதில், மேற்கொண்டு எந்தக் கால அவகாசமும் வழங்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், கோடை காலம் வருவதற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் தான் தமிழக விவசாயிகள் பிரச்சனையை சமாளிக்க முடியும் என முதலமைச்சர் பழனிசாமி, ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட 4 மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close