[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தும் நீதிமன்றம்

courts-interested-in-students-welfare

மாணவர்களுக்கான உளவியல் கல்வியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும், அவற்றை கண்காணிப்பது குறித்தும் ஆய்வு செய்ய குழு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்துள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் தனது 19 வயது மகள் நமீதாவை கண்டுப்பிடித்து ஆஜர்படுத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் விமலா, கிருஷ்ணவள்ளி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது மேலப்பாளையம் போலீஸார் நமீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சரியாக படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதால் வீ்ட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார். இனிமேல் மகளை திட்டுவதில்லை என நீதிகளிடம் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இதையடுத்து நமீதா மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி முடிவெடுக்க நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.


பின்னர் நீதிபதிகள் விமலா, கிருஷ்ணவள்ளி அமர்வு "இந்திய மக்கள் தொகையில் 46 சதவீதம் பேர் குழந்தைகள். இந்த எண்ணிக்கை உலக குழந்தைகள் மக்கள் தொகையில் 19 சதவீதம் ஆகும். கல்வி என்பது தொடர்ச்சியான செயல்பாடு. கல்வியால் மாணவர்கள் பொறுப்பானவர்களாகவும், பிரச்னைகளை எதிர்கொள்பவர்களாகவும், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் உருவாக்கப்படுகின்றனர்.ஆனால் தற்போது மாணவர்கள் பல்வேறு சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, ஆசிரியர்களை மாணவர்கள் கொலை செய்வது, பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வீட்டை விட்டு ஓடுவது, போதை பழக்கத்துக்கு ஆளாகுதல் போன்ற பிரச்னைகளை மாணவர்கள் சந்திக்கின்றனர். 


குழந்தைகளின் ஆரோக்கியமான மனநிலைக்கு போதுமான முக்கியத்துவம் வழங்குவதில்லை. மாணவர்கள் விடலைப் பருவத்தில் தங்களை சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்களாலும், உடல் ரீதியான மாற்றங்கள், பெற்றோரிடையே ஏற்படும் தகராறு, விவாகரத்து, பாலியல் தொந்தரவு, கல்வி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனநல பாதிப்புக்கு ஆளாகின்றனர்.இதனால் இளம் வயதில் மன அழுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது. ஆனால், அதை பல குடும்பங்கள் கருத்தில் கொள்வதில்லை. பலர் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் புறக்கணிக்கின்றனர்.இதனால் இளைஞர்களாக அவர்கள் வளரும் போது பல்வேறு மனச்சிதைவுகளிலும், வன்முறை மனநிலைக்கும் ஆளாகின்றனர்.

மாணவர்களின் மனநலத்தில் அக்கறை செலுத்துவதில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளதாக உலக சுகாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் மத்தியில் மனநலம் குறித்து கற்பித்தலை உருவாக்க பள்ளிகளே சரியான இடமாகும். பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மனநல மருத்தவர்கள் ஒன்றிணைந்து மாணவர்களின் மனநலனை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் மனநல பாதிப்பு மாணவர்களின் வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது. இதை அகற்ற வேண்டும்.

இதற்காக மாநில தொழில் கல்வி இயக்குனர் தலைமையில் பள்ளி கல்வி, உயர் கல்வி செயலர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.சுப்பையா, மனநல மருத்துவ நிபுணர் சி.ராமசுப்பிரமணியன், பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனை பதிவாளர் கே.சேகர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

இந்தக்குழு தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தேர்வுமுறையை, பெற்றோர்- ஆசிரியர் கலந்துரையாடல் , கல்வி, உளவியல் மற்றும் முன்னேற்றத்தில் மாணவர்களுக்கு கிடைத்து வரும் ஆதரவு, பிற திறன்களி்ல் மாணவர்களின் நிலை, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விச் சூழலில் சந்தித்து வரும் சவால்கள் குறித்து விரிவாக ஆய்வு நடத்த வேண்டும். 

சிறந்த மனநலம் கொண்ட மாணவர்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள், மாணவர்கள் மனதில் இருந்து வன்முறையை நீக்கும் முறைகள், மாணவர்களின் மனநலம், கல்வியை மேம்படுத்தும் வழிமுறைகள், சாவல்களை எதிர்கொள்ளும் மனநிலை உருவாக்குவது, உளவியல் கல்வியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும், அவற்றை கண்காணிப்பது குறித்தும் ஆய்வு செய்த 10நாளில் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close