[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு 04 Jan, 2018 03:43 PM

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

extension-chennai-map-started-by-cm-palanisami

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு 3 வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 426 சதுர கி.மீ. பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கி சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

அம்பத்தூரை தலைமையிடமாக கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட 47 கிராமங்கள் உள்ளன. தண்டையார்பேட்டையை மையமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட 32 கிராமங்கள் அடங்கியுள்ளன. கிண்டியை தலைமையிடமாக கொண்ட தென் சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 43 கிராமங்கள் உள்ளன.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் முதற்கட்டமாக தமிழகத்திலுள்ள 21 மாவட்டங்களைச் சேர்ந்த 43 வட்டங்களுக்குரிய 24.11 லட்சம் கணினிப்படுத்தப்பட்ட  நில அளவை புல வரைபடங்களை http.//eservices.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணையவழி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close