[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

குப்பையில் ஒளித்து வைத்திருந்த 50 சவரன் மீட்பு

4-robbers-arrested-in-chennai-for-continuous-theft

சென்னையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளில் ஐம்பது சவரனை குப்பையில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மண்ணடி மூர் தெருவைச் சேர்ந்த விக்ரம் என்பவரின் வீட்டில் கடந்த 4 ஆம் தேதி இவரது மனைவி ரபியா, கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் வீட்டுக்குள் புகுந்து 60 சவரன் நகைகளை திருடிச்சென்றுள்ளார். கொள்ளை பற்றி வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிசிடிவி காட்சிகள் சிக்கின. இதில் கொள்ளையன் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனைக்கொண்டு பாரிமுனை பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ என்பவரை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லாரன்ஸ் தனது நண்பர்கள் அஜீத், ஆகாஷ், பாலு ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளம் அருகே குப்பைக்கிடங்கில் இந்த கும்பல் தங்க நகைகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது. குப்பையில் ஒளித்து வைத்திருந்த 50 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். கைதான 4 பேரிடமும் வடக்கு கடற்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close