[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பற்றாக்குறையை மழை நீரை சேமிக்க வேண்டும் மழை பெய்ய மரங்களை வளர்க்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஈரோடு மண்டல மாநாடு மூலம் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் நல்ல மாற்றத்தை உருவாக்கிடுவோம் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS சென்னையில் டிஜிபி அலுவலகம் முன் நேற்று தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு ஆகியோர் கைது
  • BREAKING-NEWS சட்டத்திற்கு புறம்பாக பாஜகவினர் என்றைக்குமே செயல்படமாட்டார்கள் - தமிழிசை
  • BREAKING-NEWS புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரின் நியமனம் செல்லும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம் மத ஜாதி கலவரம் இல்லாமல் அமைதி பூங்காவாக திகழ்கிறது- ஓபிஎஸ்
  • BREAKING-NEWS உறுதியாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்: முதல்வர் பழனிசாமி

173 தமிழக மீனவர்களுடன் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 15 படகுகள்

tn-fishermen-are-returned-on-lakshadweep

லட்சத்தீவில் 15 படகுகளுடன் கரை ஒதுங்கிய 173 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார். 

தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியில் இருந்து கடலுக்குள் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் சிக்கியுள்ளதாக நேற்று நூற்றுக்கணக்கான மீனவர் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கண்ணீருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலில் சிக்கிய 15 படகுகள் 173 மீனவர்களுடன் லட்சத்தீவில் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய மீனவர்கள் கன்னியாகுமரி, நாகை, புதுச்சேரி, திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என லட்சத்தீவு மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து கரை ஒதுங்கிய படகுகளின் பெயர்கள் மற்றும் மீனவர்களின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி "சீ ஸ்டார்" என்ற படகில் நாகையை சேர்ந்த மாதரசன், மாதேஷ், ராகவன், முகிலன், ராகவேல், சக்திவேல் உள்ளிளிட்ட 6 பேரும் கேரளாவை சேர்ந்த 7 பேரும் கால்பேனி தீவில் பத்திரமாக கரைசேர்ந்துள்ளனர்.

நிக்கில் மோன் என்ற படகில் சென்ற குமரியை சேர்ந்த மைக்கேல் சலாடே, அஜித்குமார், ராபின்சன், நெல்சன், மைக்கேல் ஆன்டனி, சிவன் 6 பேரும் நாகையை சேர்ந்த முகுந்தன், அரவிந்தராஜா, கிருஷணன், கபீர் 4 பேரும் தஞ்சையை சேர்ந்த மில்கிஷ் ராஜூ என்பரும் கேளராவை சேர்ந்த 2 இருவரும் கால்பேனி தீவில் பாதுகாப்பாக உள்ளனர்.

தேவமாதா என்ற படகில் பயணித்த கன்னியாகுமரியை சேர்ந்த வில்ஃபர்டு, தேவபால், ஏசுதாஸ், ஷான், ஷிபு, ஜெய்மோன், வியாகுலதினி உள்ளிட்ட 7 பேரும் அசாமை சேர்ந்த இருவரும் அருணாச்சலபிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கால்பேனி தீவில் பத்திரமாக கரை ஒதுங்கியுள்ளனர்.

மதர் என்ற படகில் சென்ற கன்னியாகுமரியை சேர்ந்த ஃப்ரட்டி, லாரன்ஸ், சுரேஷ், சூசைநாயகம், ஸ்டெல்லாஸ், அபி, நிக்சன், ஜார்வின், ஆகிய 8 பேரும் புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணமருது, மதுரை பாண்டி, சங்கர், பரத், என12 பேர் கால்பேனியில் பாதுகாப்பாக உள்ளனர்.

ஸ்ரீராகம் என்ற படகில் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் சுபின், கவின்ஜோஸ், விநோத், ரதிஷ், அந்தோணி தாஸ், ராஜூ, ஷாஜிகுமார், ஆகிய 7 பேரும் திருவனந்தபுரத்தை சேர்ந்த இருவரும் கால்பேனி தீவில் பத்திரமாக கரை ஒதுங்கியுள்ளனர்.

நீல் சாமுவேல் என்ற படகில் சென்ற சுனில், ஜினு, அஜின், டான்பாஸ்கோ, ஆன்டனி, மிலன், ஹலாரி, ஆகிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 7 பேரும் திருவனந்தபுரம், அசாமை சேர்ந்த இருவர் என மொத்தம் 9 பேர் கால்பேனியில் கரை ஒதுங்கியுள்ளனர்.

கிரிஸ்ட் பவன் என்ற படகில் சென்ற குமரியை சேர்ந்த விஜூ, அஜிஸ், ஷஜின், அல்பின், அர்ஜூன், கிளீட்டஸ், ரீகன், அமலாதாசன், பிரஜோத், டீனு ஆகிய 10 பேரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இருவரும் கால்பேனியில் பத்திரமாக உள்ளனர்.

லிவ்பர் என்ற படகில் பயணித்த கன்னியாகுமரி மீனவர்கள் ஆரோக்கிய தாஸ், ஸ்டீபன், ஜித்து, விஜய், ஷோயின்தில் ஆகிய 5 பேரும் நாகையை சேர்ந்த ஸ்ரீராமன், கார்த்திக் ஆகியோரும் புதுச்சேரியை சேர்ந்த மணிகண்டபிரபு, ஆறுமுகம், ஷாரூல்ராஜ், கந்தநாதன், ஆனந்த் ஆகிய 5 பேர் என மொத்தம் 12 பேர் அந்த்ராட் தீவில் பாதுகாப்பாக உள்ளனர்.

அமல அண்ணா என்ற படகில் பயணித்த குமரியை சேர்ந்த சுசேஷ் பாக்கியம், ராஜாமணி, குமார், ராபர்ட், மேரி அசோக், ஜெபிஸ்டல், ஜெரோம், ஜெய்சன், வெனிஸ் ஆகிய 9 பேரும் திருவனந்தபுரத்தின் ராஜூ என்பரும் அந்த்ராட் தீவில் பத்திராக கரை ஒதுங்கியுள்ளனர்.

ஹரியா பூச் என்ற படகில் தமிழகத்தை சேர்ந்த பிரலன், பேஜன், தங்கப்பன், வர்கீஸ், கலைஞர் ஆகிய 5 மீனவர்கள் உட்பட 11 பேர் ஹகாட்டி தீவில் பத்திரமாக கரை ஒதுங்கியுள்ளனர்.

என்.எஸ் மாதா என்ற படகில் சென்ற 13 மீனவர்களின் கால்பேனி தீவில் பத்திரமாக கரை ஒதுங்கியுள்ளனர். வேணுகோபாலன், சுந்தர்ராஜ், பாக்கியராஜ், விஜயகுமார், முருகன், ராஜன் ஆகிய தமிழக மீனவர்கள் என்எஸ்மாதா படகில் பயணித்தது தெரியவந்துள்ளது. மற்ற 8 பேர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரவில்லை.

லார்ட்டு ஆஃப் ஓஷன் என்ற படகு 13 மீனவர்களுடன் கில்டன் முகத்துவாரத்தில் பத்திரமாக உள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த வேலு, துரைராஜ், மன்னாங்கட்டி, விசுல் ஆகியோர் பயணித்துள்ளனர்.

தேவி மாதா என்ற படகில் பயணித்த 12 மீனவர்களும் கில்டன் தீவில் பத்திரமாக கரை ஒதுங்கியுள்ளனர். அதில் பயணித்தவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர ஃபதாகுல் பரியா என்ற படகில் 11 பேர் ஹாகாட்டி தீவில் பத்திரமாக கரை ஒதுங்கியுள்ளனர். அவர்களின் ஊர் விரங்கள் தெரியவரவில்லை. மேலும் சுனிதா மோல் என்ற படகில் பயணித்த 6 பேர் சேத்லாட் தீவில் பத்திரமாக கரை ஒதுங்கியுள்ளனர். அவர்களை பற்றிய முழுவிவரம் தெரியவரவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close