[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான் காலமானார்

former-mp-vallal-peruman-passed-away

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான் காலமானார். அவருக்கு வயது 66.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த வள்ளல் பெருமான், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை வள்ளல் பெருமானின் உயிர் பிரிந்தது.

ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான வள்ளல் பெருமான் 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் 3 முறை சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2001-ம் ஆண்டு காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வள்ளல் பெருமானுக்கு சரளா என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். வள்ளல் பெருமான் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close