[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

15 நாட்களில் 8 குற்றவாளிகளை பிடித்த மொபைல் ஆப்

new-mobile-app-for-chennai-police-to-catch-criminals

குற்றவாளிகளை பிடிக்க உதவும் புதிய மொபைல் அப்ளிகேசன் மூலம் 15 நாட்களில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த 15 நாட்களில் எட்டு குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்துள்ளது ஒரு மொபைல் அப்ளிகேஷன். சென்னை காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க உதவும் இந்த மொபைல் அப்ளிகேஷன் நல்ல பலனைத் தருவதால் மாநிலம் முழுவதும் செயல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி முதல் சென்னை திநகர் காவல் வட்டத்திற்கு உட்பட்ட 500 காவல்துறையினருக்கு புதிய பேஸ் டிராக்கர் மொபைல் அப்ளிகேஷன் பதிவேற்றப்பட்டுள்ளது. உரிமத்துடன் கூடிய இந்த மொபைல் அப்ளிகேஷனில்‌‌ 12,000 குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. வாகன சோதனையிலோ, பிற விசாரணைகளின் போதோ பிடிபடுபவர்கள் பழைய குற்றவாளிகளா என்பதை கண்டுபிடிக்க இந்த மொபைல் அப்ளிகேஷன் உதவுகிறது.

இதுகுறித்து தி.நகர் காவல் துணை கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும், பொதுமக்களுக்கு இடையூறு வராமல் சோதிக்கவும் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷனில் 16 வகையான குற்றங்கள் வகை பிரிக்கப்பட்டு, அந்தந்த குற்றங்களை செய்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன என்று கூறினார். 

சோதனை அடிப்படையில் சென்னை காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மொபைல் அப்ளிகேஷன் மேலும் பல‌குற்றவாளிகளை பிடிக்க உதவும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close