[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
 • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
 • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
 • BREAKING-NEWS புதிய மணல் குவாரிகள் அமைப்பதை கைவிடாவிட்டால் மக்கள், விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது: இயக்குநர் அமீர்
 • BREAKING-NEWS சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் போலீசார் குவிப்பு
 • BREAKING-NEWS தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரேஷன் கடைகள் முன் போராட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
 • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
 • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்: தம்பிதுரை
தமிழ்நாடு 11 Nov, 2017 01:47 PM

சிங்கவால் குரங்குக‌ளை பாதுகாக்க வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை

wildlife-enthusiasts-request-to-protect-the-monkeys

அழிந்துவரும் அரிய வகை சிங்கவால் குரங்குகளை ‌‌பாதுகாக்க வேண்டும் என வன உயிரின‌ ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் குறிப்பாக கல்லார் காட்டுப்பகுதியில் காண்பதற்கு அரிதான சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இவ்வகை குரங்குகள் பசுமைபோர்த்திய அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மலைக்காடுகளில் தான் தங்களது வாழ்விடமாக கொண்டிருக்கும். மிக உயரமான மர உச்சிகளில் வசிக்கும் இவை மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. இத்த வகை குரங்குகளின் முகத்தை சுற்றிலும் அடர்ந்த ரோமத்தோடு சிங்கத்தினை போலவும், குறிப்பாக இதன் வால் சிங்கத்தின் வால் போலவே காட்சியளிப்பதால் இவை சிங்கவால் குரங்குகள் என்றழைக்கப்படுகிறது. கூட்டமாக வாழும் இயல்புடைய இவை காடுகளில் கிடைக்கும் பழங்கள் மற்றும் அதன் விதைகளையும் தான் உணவாக உட்கொள்கின்றன.

சமீபகாலமாக மலைகள் மற்றும் இதன் அடிவாரப்பகுதிளில் இவற்றின் வாழ்விடங்கள் சுருக்கபட்டுக்கொண்டே செல்கிறது. இவற்றுக்கான இயற்கையான உணவு வகைகள் காட்டுக்குள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவும் இவற்றின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகின்றன. எனவே அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிங்கவால் குரங்குகளை பாதுகாக்கும் வகையில் அதன் வாழ்விடத்தை விரிவுபடுத்தபடுத்தி அவை வாழ ஏற்ற சூழலை உரு‌வாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close