[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
  • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தமிழ்நாடு 09 Nov, 2017 03:03 PM

வாகனங்களில் பின்பக்க கண்ணாடிகள் இல்லாததால் விபத்து 

madurai-high-court-order-news

பின்பக்க காட்சி கண்ணாடிகள் இன்றி வாகனங்களை ஓட்டுபவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க கோரிய மனுவை பரிசீலித்து 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," சமீப காலங்களில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்களில் இருக்கும் பக்கவாட்டு கண்ணாடி மற்றும் பின்பக்க காட்சி கண்ணாடிகளை அகற்றி விட்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதனை பிறரை ஈர்க்கும் விசயமாக எண்ணி செய்து வருவது அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து ஆய்வுப்பிரிவின் ஆய்வுப்படி 15 முதல் 24 வயதிற்குட்பட்ட 48,420 பேர் உயிரிழந்துள்ளனர். 77.1% விபத்துக்கள் ஓட்டுநரின் தவறாலேயே நிகழ்கிறது. கண்ணாடிகளை அகற்றி விட்டு,  கண்ணாடிகளின்றி வாகனத்தை இயக்குவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம். ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பெங்களூருவில் பக்க மற்றும் பின்பக்க காட்சி கண்ணாடிகளின்றி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆகவே,  கண்ணாடிகளின்றி 2 சக்கர, வாகனங்களை ஓட்டுபவர்களிடமிருந்து அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை ஆணையர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close