[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
தமிழ்நாடு 10 Oct, 2017 07:52 AM

தீவிரம் குறையாத காய்ச்சல்: நேற்று ஒரேநாளில் 13 பேர் பலி

13-dengue-deaths-recorded-in-tamil-nadu-yesterday

தமிழகத்தில் காய்ச்சல்களின் தீவிரம் குறையவில்லை. டெங்கு காய்ச்சலாலும், பிறவகை காய்ச்சல்களாலும் நேற்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சங்கர் என்ற இளைஞரும், போச்சம்பள்ளியை அடுத்த கே.புதூரைச் சேர்ந்த தர்ஷிகா என்ற 7 வயது சிறுமியும் இன்று உயிரிழந்தனர்.

சேலத்தில் இன்று ஒரேநாளில் 2 பேர் டெங்குவால் உயிரிழந்தனர். பத்து வயது சிறுமி ரக்ஷிதா மற்றும் 11 வயது சிவசக்தியும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் ஒரு குழந்தை உட்பட இருவர் பலியாகி உள்ளனர். மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 20-வார்டு பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் 3 வயது மகன் விஷ்ணு மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த 55 வயதான அம்ரோஸ் ஆகியோர் காய்ச்சலால் உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்த்த ராமசாமி என்பவரின் மகள் ஆர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாகை வேதநாயகம் செட்டித் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது 13 வயது மகன் கிங்ஸ்லி பிரவின் குமார் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தான்.

தாராபுரத்தில் அருந்ததி என்ற பெண்ணும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டையில் சாந்தி என்ற மூதாட்டியும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

திருப்பூரில் சாமளாபுரம் பகுதியில்‌ டெங்கு காய்ச்சல் காரணமாக கவிதா என்ற பெண்ணும், வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். நாகையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 11-ம் வகுப்பு மாணவர் பிரவீன்குமார் ஆகியோரும் இன்று ஒரேநாளில் உயிரிழந்தனர்.

நாமக்க‌ல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கருமாகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் தனசேகர் என்பவரின் மனைவி ரமா டெங்கு அறிகுறியுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் காய்ச்சலால் 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பத்து பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 30 பேர் டெங்கு காய்ச்சலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 186 பேர் காய்ச்சல்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் தனி வார்டில் வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். புறநோயாளிகளாக 220 பேரும், உள்நோயாளிகளாக 180 பேரும் காய்ச்சல்களால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close