[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
 • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
 • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
 • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
 • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
தமிழ்நாடு 14 Sep, 2017 09:20 PM

ஹாசினி வழக்கில் குற்றவாளியின் தண்டனை பிறருக்கு பாடமாகும்: அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar-about-hasini-case

சிறுமி ஹாசினியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி மீது எடுக்கப்படும் நடவடிக்கை, மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூர் அருகே உள்ள மதனந்தபுரம் மாதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு, ஸ்ரீதேவி தம்பதியின் 7வயது மகள் ஹாசினி கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி காணாமல் போனார். புகாரின் பேரில் தேடி வந்த காவல்துறையினர் மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையிலிருந்து சிறுமியின் உடலை மீட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில், பொறியியல் பட்டதாரி தஷ்வந்திடம் நடைபெற்ற விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். தஷ்வந்த் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக அவர் சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவரை, மகளிர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. தங்கள் மகளை கொடூரமாக கொன்ற தஷ்வந்திற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ஹாசினியின் பெற்றோருக்கு தஷ்யந்த் ஜாமீனில் வெளிவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் தந்தை பாபு, குற்றவாளியின் மீதான குண்டர் சட்டம் ரத்து என்பது, எந்த குற்றம் வேண்டுமென்றாலும் செய்யலாம் என மக்களுக்கு சொல்வது போல் உள்ளது என்றார். கொல்லலாம், பாலியல் வன்கொடுமை செய்யலாம், பலரை கொன்றாலும் வெளியில் வந்துவிடலாம் என்பது தான் தஷ்வந்த் விவகாரத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றும் வருத்தம் தெரிவித்தார். குற்றவாளியின் தந்தை சாவல் விட்டதை போல், தன் மகனை வெளியே கொண்டு வந்து விட்டார் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஹாசினி விவகாரத்தில் சட்ட அமைச்சரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அத்துடன் சிறுமி ஹாசினியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி மீது எடுக்கப்படும் நடவடிக்கை, மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தஷ்வந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதன் உத்தரவு நகலை ஆய்வுசெய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close