[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS கமல் ஆலோசனை பெறவில்லை; மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார் - நல்லகண்ணு
  • BREAKING-NEWS மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் நியமனம்: நீதிபதிகள் வேதனை

rowdy-appointed-in-tollgate-madurai-high-court-judge

பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ரவுடிகளும், சமூக விரோதிகளும் ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டவாய்த்தளை முதல் குளித்தளை வரை மணல் குவாரிகள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் கட்டணம் செலுத்தி பயணிப்போர் பாதிக்கப்படுகின்றனர். ஜூன் 17-ம் தேதி அவ்வழியாக பயணித்த போது சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் 700-க்கும் அதிகமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் காவிரி ஆற்றிலிருந்து மணல் அள்ளுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தன. சாலையை பயன்படுத்த பணம் வாங்கிக் கொண்டு லாரிகளை நிறுத்த அனுமதிப்பது தவறு. எனவே பெட்டவாய்த்தளை முதல் குளித்தளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லாரிகளை நிறுத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, டோல்கேட் மையங்களின் தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்ட இயக்குநர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்‌ தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொது மேலாளர் நேரில் ஆஜராகி, சுங்கச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் ரவுடிகளும், சமூக விரோதிகளுமே பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என வேதனை தெரிவித்தனர். மேலும், விதிமீறலில் ஈடுபடும் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினர். சுங்கச்சாவடி ஒப்பந்தங்களைப் பெரிய நிறுவனங்களிடம் வழங்கிவிட்டு தற்போது நடவடிக்கை எடுக்காத நிலையில் அரசு இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் சுங்கச் சாவடிகள் இயங்க முறையான திட்டங்கள் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், கேரளாவில் சுங்கச்சாவடிகளில் தவறு நிகழ்ந்தால் அந்த மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தனர். மேலும் சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் செல்ல தனி வழி இல்லை என்றும் நோயாளிக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close