[X] Close
JUST IN
தமிழ்நாடு 07 Aug, 2017 05:35 PM

ராமேஸ்வரம் - அயோத்தி விரைவு ரயில் கும்பகோணத்தில் நின்று செல்லும்

rameshwaram-ayodhya-express-railway-will-stop-at-kumbakonam

ராமேஸ்வரம் - அயோத்தி வாராந்திர விரைவு ரயில் இன்று முதல் கும்பகோணத்தில் நின்று செல்லும் என அறிவிப்பட்டுள்ளது.

அப்துல்கலாம் நினைவு தினத்தில் தொடங்கி ‌வைக்கப்பட்ட ராமேஸ்வரம் - அயோத்தி வாராந்திர விரைவு ரயில் இன்று முதல் கும்பகோணத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையை அடுத்து, விழுப்புரம் ரயில் நிலையத்தில்தான் இந்த ரயில் நிற்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென்னகத்தின் அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணத்தில் இந்த ரயில் நின்று சென்றால், ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரதிமோகனிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவரது முயற்சியால், அயோத்தி வாராந்திர விரைவு ரயில் கும்பகோணத்தில் நின்று செல்லும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். அதன்படி, கும்பகோணம் ரயில்நிலையத்திற்கு இன்று காலை வந்த விரைவு ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close