[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் காணாமல் போன விளம்பர மாடல்... போலீசில் புகார்

chennai-model-missing

சென்னையில் விளம்பர மாடலும், கதாசிரியையுமான இளம் பெண்ணைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகள் ஞானம். சென்னை கேகே நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து டிவி சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதி வந்ததுடன் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்துள்ளார். இதுதவிர விளம்பரப் படங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு, கடந்த 26-ம் தேதியன்று காலையில் தனது கருப்பு நிற ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் வெளியில் சென்ற ஞானம், இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அவரது உறவினர் மகிஜா கேகே நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஞானத்தை யாராவது மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டார்களா..? அவர் என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. கேகே நகர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் திடீரென காணாமல் போயுள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close