[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

இன்னும் 500 டாஸ்மாக்கை எப்ப மூடுவீங்க? கோர்ட் கேள்வி

high-court-ask-govt-to-close-500-tasmac

தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என்று பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 29 ஆம் தேதி திருமுல்லைவாயிலில் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், தாயார் இறந்ததால் பிரசன்னா என்பவரை பரோலில் விடுவிக்ககோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசன்னாவை விடுவிக்க உத்தரவிட்டும் அவர் விடுவிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, புழல் சிறை கண்காணிப்பாளர் முருகேசன், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இன்று நேரில் ஆஜரானார்கள். நீதிமன்ற உத்தரவு கிடைக்காதவரை வெளியே விடக்கூடாது என்ற விதிகளின் படியே தாமதம் ஏற்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவர்கள் சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், இன்னும் காகித முறையையும், கம்பியில்லா தொலைத்தொடர்பு முறையையும் நம்பியிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். வயர்லஸ் சேவை சிறைக்குள் வழக்கத்தில் உள்ளதாகவும், சிறைத்துறையையும், நீதித்துறையையும் இணைக்கும் வகையில் 100 சதவிதம் மாற்ற சோதனை நடந்துவருவதாகவும், அடுத்த மாதத்துக்குள் அமலுக்கு வரும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து சிறைத்துறையில் தொலைத்தொடர்பு மேம்பாடு குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து வரும் ஜூன் 12 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அரசு அறிவித்தபடி, இன்னும் 500 மதுபானக்கடைகள் எப்போது மூடப்படும் என்று கேட்ட நீதிபதிகள், பள்ளிச்சீருடையில் கூட மாணவர்கள் மதுவாங்குவதாகத் தெரிவித்தனர். அடுத்த தலைமுறையாவது மதுவுக்கு அடிமையாகாமல் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மதுவில்லாத மாநிலங்களாக பீகார், குஜராத் மாநிலங்கள் இருக்கும்போது தமிழகத்தில் முழு மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close