[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

முருகனும், நளினியும் நிச்சயம் விடுதலை ஆவார்கள்: முருகனின் தாயார் பேட்டி

somani-says-murugan-and-nalini-will-be-released

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள முருகனும் நளினியும் நிச்சயம் விடுதலை ஆவார்கள் என்று முருகளின் தாயார் சோமணி நம்பிக்கைத் தெரிவித்தார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகனைப் பார்ப்பதற்காக, அவரது தாயார் சோமணி, இலங்கை யாழ்பாணத்தில் இருந்து வந்துள்ளார்.

அவர் வேலூரில் புதியதலைமுறைக்கு அளித்த பிரத்தேய பேட்டியில், நளினி மற்றும் முருகன் உட்பட 7 பேரும் விரைவில் விடுதலை ஆவர்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இதுவரை முழுமையாக உண்மை வெளிவரவில்லை, நிச்சயம் ஒரு நாள் உண்மை வெளியே வரும் என்றும் கூறினார்.

மேலும் ’ராஜிவ்காந்தி கொலைவழக்கை விசாரித்த கார்த்திகேயேனே, தான் வழக்கை மாறியமைத்ததாக ஒப்புக்கொண்ட பின்னரும் அரசு மெளனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது இவர்கள் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு பலமாக இருந்தது, ஆனால் அவர் திடீரென மறைந்தது எங்களுக்கு அதிர்சியை ஏற்படுத்தியது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் நிச்சயம் விடுதலை ஆகி இருப்பார்கள்’ என்று கூறினார்.

நளினி, முருகன் மகள் அரித்ராவுக்கு திருமணம் செய்ய பரோல் கோரி இருந்தார். அது இதுவரை கிடைக்கவில்லை. அப்பா, அம்மா முன்னிலையில் தான் தனது கல்யாணம் நடக்க வேண்டும் என்று அரித்ரா ஆசைப்படுவதாகவும் சோமணி கூறினார். முருகன் விடுதலை ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு யாழ்ப்பாணத்தில் முருக கடவுளுக்கு சிலை வைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

உண்மையிலேயே ராமனும் சீதையும் அடைந்த வனவாசத்தை விட முருகனும் நளினியும் பல மடங்கு அனுபவித்து விட்டார்கள். சிறையில் இருந்து நளினி எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு நாள் தோறும் கண் கலங்கிவருகிறோம். அவர்கள் சிறையில் படும் பாடு அப்புத்தகத்தில் தெளிவாக உள்ளது எனவும் கூறினார். என்னை பொறுத்தவரை நளினி, முருகன் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதுவரை நான் உயிரோடு இருப்பேனா என்ற நம்பிக்கை எனக்கில்லை. எங்களது கடைசி காலத்தில் ஒரு மாதமாவது முருகனுடன் தங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப் படுவதாகவும் முருகனின் தாயார் சோமணி கூறினார். தற்போது நான் முருகனை சந்திக்க வந்தேன். ஆனால் அவர் சிறையில் செல்போன் பயன்படுத்தியதால் அவருடன் யாரும் சந்திக்கக் கூடாது என்றார்கள். இருந்த போதும் 2 நாள் கழித்து மீண்டும் அவரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். ஆனால் சிறையில் உள்ள சாந்தனை சந்தித்து பேசினேன். சாந்தன் கூறுகையில், நிச்சயம் நாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக முருகனின் தாயார் சோமனி கூறுகையில் மத்திய, மாநில அரசுகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளால் தான் இவர்களது விடுதலை தள்ளிப்போவதாக நான் கருதுகிறேன் என்றும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Murugan nalini somanimurugan nalini somani
Advertisement:
Advertisement:
[X] Close