சென்னையில் உள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தன்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நிர்பந்தப்படுத்தி விலகச் செய்ததாக சசிகலா தரப்பினர் மீது பன்னீர்செல்வம் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். மக்களும், அதிமுக தொண்டர்களும் கேட்டுக் கொண்டால், ராஜினாமாவை திரும்பப் பெற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அவரது புகாருக்கு சசிகலாவும், அமைச்சர்களும் பதிலளித்து விமர்சனம் செய்தனர். உடனடியாக, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தன்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த சூழலில், முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் வீட்டு முன்பு அதிக அளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!