[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

முதல்வரின் டெல்லி பயணம் வெற்றி பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து

mk-stalin-wishes-for-pannerselvam-delhi-visit

ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‌அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை நேரில் சந்தித்து அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்த இருப்பதாக முதலமைச்சர் கூறியிருப்பதை வரவேற்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு எப்படியாவது நடத்தப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செல்லும் டெல்லி பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதிகளுடன், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தால், ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கையை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பரிசீலிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close