[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

வறட்சி குறித்து அச்சம் வேண்டாம்: ஓ.பன்னீர்செல்வம்

do-not-be-afraid-of-the-drought-chiefminister-opaneerselvam

தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்து விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை எனவும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் மாநிலம் முழுவதும் வறட்சி சூழல் உருவாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி மாவட்டங்களில் 10 சதவீத கிராமங்களில் பயிர் நிலை குறித்து நேரடி ஆய்வு செய்யப்பட்ட பின்னரே வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க இயலும் என கூறியுள்ளார். சென்னை தவிர இதர மாவட்டங்களில் நேரடி ஆய்வு செய்து, பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திட மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்த குழுக்கள் ஜனவரி 10 ஆம் தேதி அறிக்கை சமர்பிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனை மேற்பார்வையிட அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் உடனடியாக அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பயிர் நிலைமைகள் குறித்து உயர்மட்ட குழுக்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் விவசாயிகளுக்கு தமிழக அரசால் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், தற்போதுள்ள வறட்சி நிலை குறித்து விவசாயிகள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசு வழங்கும் நிவாரணத் தொகை தவிர, பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டு தொகையை பெற இயலும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். நெல் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பாதிப்பு அளவை பொறுத்து ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு தொகையை பெற இயலும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் வறட்சி நிலவி வரும் இந்தச் சூழ்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close