[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

சாதி, மதசார்பற்ற அரசியலை நடத்துவோம்: சசிகலா பேச்சுக்கு திருமாவளவன் வரவேற்பு

caste-hold-secular-politics-shashikala-herein-welcome-speech

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவை நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவை நோக்கி பல கேள்விகள், விமர்சனங்கள் சூழ்ந்துள்ள போதிலும்,ஜெயலலிதாவிற்கு பிறகு அந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்க சசிகலா துணிந்து முன்வந்திருப்பதை விடுதலை சிறுத்தைகள் நேர்மறையாக பார்க்கிறது என தெரிவித்துள்ளார்.

சசிகலா பொறுப்பேற்றவுடன் ஆற்றிய உரையில் ஜெயலலிதாவைப் போல சாதி மத சார்பற்ற அரசியலை நடத்துவதாக உறுதி வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டினோம், அதற்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.சசிகலாவை நேரில் தாம் சந்தித்ததை அரசியலோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர், விடுதலைச் சிறுத்தைகள் பெண்ணுரிமைக்கான இயக்கம் என்ற அடிப்படையில் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார். பின்னர் தமிழக மக்கள் குறிப்பாக ஆங்கில புத்தாண்டு கொண்டாடக்கூடிய அனைவருக்கும் விசிக சார்பில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close