[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

fishermen-boats-must-take-action-to-relieve-the-prime-minister-stalin-s-request

பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு, தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளைச் சொந்தமாக்கிக் கொள்வதென்ற இலங்கை அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கி கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ளவும், இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தத்தை இந்திய தூதரகம் வாயிலாக அல்லது பிரதமர் நேரில் தலையிட்டு முடிவு காண வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close