[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

சசிகலா நாளை முதன் முறையாக உரையாற்றுகிறார்?

sasaikala-to-speaks-before-media-tomorrow

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா நாளை, முதல் முறையாக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவே அறியப்பட்டு வந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்வாகியுள்ளார்.

இதுவரை எந்தவிதமான கட்சிப் பொறுப்பிலும் அவர் இருந்தது இல்லை. ஜெயலலிதா செல்லும் ஒவ்வொரு பரப்புரைக் கூட்டத்திற்கும் அவருடன் வாகனத்தில் செல்லும் சசிகலா எந்தவொரு பொது வெளியிலும் பேசியது கிடையாது. செய்தியாளர்கள் சந்திப்பு, பரப்புரைக் கூட்டம் என எதிலுமே அவர் பேசாததால் சசிகலாவின் குரல் எப்படி இருக்கும் என்பது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல மீடியாக்களுக்கும் தெரியாத ஒன்றே.

இந்நிலையில் சசிகலா நாளை அதிமுக பொதுச் செயலாளராக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பதவியேற்க உள்ளார். பதவியேற்ற பின் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசவும் வாய்ப்பு உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close