[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

ராம மோகன ராவின் மகன் விவேக்கிற்கு வருமான வரித்துறை சம்மன்

income-tax-summoned-to-rama-mohana-rao-son-vivek

ராம மோகன ராவின் மகன் விவேக் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராம மோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதனால் தமிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே, ராம மோகன ராவின் மகனான விவேக்கை நேற்று அவரது நந்தனம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற வருமான வரித்தறை அதிகாரிகள் அங்கு நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் விவேக் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், விவேக் ரூ.16 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்ததும் வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close