[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

டிஎன்பிஎஸ்சி-யில் அரசியல் கூடாது.. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

dont-put-politics-in-tnpsc-mk-stalin

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசியல் பிடியில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட வேண்டும் என திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஎன்பிஎஸ்சி-யின் 11 உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, தேர்வாணையத்தின் மீது எண்ணற்ற இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனிமேலாவது அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலும் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், சிறந்த நிர்வாகத்திறன் படைத்த நேர்மையாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை அரசியலின் பிடியில் இருந்து முற்றிலும் விடுவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close