[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

புரட்டிப்போட்ட வர்தா புயல்.. சென்னை விமான நிலையம் மூடல்

chennai-airport-remain-closed-till-night

வர்தா புயலின் காரணமாக சென்னை விமான நிலையம் இரவு முழுவதும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடுபாதையி‌ல் தண்ணீர் புகுந்ததால் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு, மதுரை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு முனையத்தில் சாக்கடை நீர் புகுந்ததால் அதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் 7 இடங்களில் கண்ணாடிகளும், 3 இடங்களில் மேற்கூரைகளும் சரிந்து விழுந்தன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விமான நிலையத்திற்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 5‌00-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருக்கின்றனர். வர்தா புயலினால் 44 ‌பன்னாட்டு விமான சேவைகளும், 123 உள்நாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close