[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

எச்சரிக்கை புயல் கூண்டுகளும்... அதன் குறியீடுகளின் விவரங்களும்..

vardha-storm-storm-cage-tower-lists

பொது மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் அதன் குறியீடுகள் குறித்த விளக்கங்களை பற்றிய தகவல்களை காண்போம்.

எண் 1 - வெகு தூரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது.

எண் 2 - தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கிறது, துறைமுகத்தில் இருந்து வெளியேறும் கலன்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

எண் 3 - மோசமான வானிலை, காற்றின் வேகம் அதிகம்.

எண் 4 - புயல் பின்னர் துறைமுகப் பகுதியை தாக்கலாம்.

எண் 5 - புயல் துறைமுகத்தின் வலதுபக்கக் கரையைக் கடக்கும்.

எண் 6 - புயல் துறைமுகத்தின் இடது பக்கமாகக் கரையைக் கடக்கும்.

எண் 7 - புயல் துறைமுகம் இருக்கும் பகுதி வழியாக அல்லது மிக அருகே கரையைக் கடக்கும்.

எண் 8 - வலிமை நிறைந்த புயலானது துறைமுகத்தின் வலதுபக்கக் கரையைக் கடக்கும்.

எண் 9 - வலிமை நிறைந்த புயலானது துறைமுகத்தின் இடது பக்கக் கரையைக் கடக்கும்.

எண் 10 - மிகக் கடுமையான புயல் துறைமுகம் இருக்கும் பகுதி வழியாகவோ மிக அருகிலோ கரையைக் கடக்கும்.

எண் 11 -புயல் எச்சரிக்கை மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு மற்றும் நாகை, காரைக்கால், புதுச்சேரி, கடலூரில் 8 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close