[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

எம்ஜிஆர் நினைவிடம் பெயர் மாற்றம்

mgr-memorial-will-be-renamed-to-bharat-ratna-dr-mgr-and-jayalalithaa-memorial-resolution-passed

’பாரத ரத்னா’ எம்ஜிஆரின் நினைவிடம் என்பதை பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடம் செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், அவருக்கு எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே நினைவிடம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.15 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கவும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடம் என பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close