[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

அதிமுகவின் மையப்புள்ளியாக செயல்படுமாறு சசிகலாவுக்கு வலியுறுத்தல்

senior-functionaries-of-aiadmk-urge-thirumathi-sasikala-to-lead-the-party

அதிமுகவின் மையப்புள்ளியாக செயல்படுமாறு சசிகலாவை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை அதிமுகவின் மூத்த தலைவர்கள் மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அதிமுகவின் மையப்புள்ளியாகவும் அரணாகவும் செயல்படுமாறு அவர்கள் சசிகலாவிடம் கோரியுள்ளதாகத் தெரிகிறது. கட்சி தொடர்பாக எழும் தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகள் சசிகலாவிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து சசிகலா உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close