[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

மேலும் ஒரு தலைவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்... சோ மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

kamalhassan-mourning-for-cho-ramasamy-death

மேலும் ஒரு தலைவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என சோ மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துக்ளக் இதழின் ஆசிரியரும் மூத்த நடிகருமான சோ.ராமசாமி சென்னையில் இன்று காலமானார். தற்போது அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் சோ மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், மேலும் ஒரு தலைவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். சோ குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close