[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஜெயலலிதா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் நேரில் அஞ்சலி

rajinikanth-pays-condolence-for-jayalalithaa

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் உடல் அரசு மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரிடம் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, ஜெயலலிதா மறைவு குறித்து தனது டுவிட்டரில் இரங்கல் குறிப்பு வெளியிட்டிருந்த ரஜினிகாந்த், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close