[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து மீண்டு வருவார்: வைகோ

c-m-jayalalithaa-will-recover-the-full-recovered-vaiko

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து மீண்டு வருவார் என தாம் நம்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர், அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டுவதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஜெயலலிதா மிகுந்த மனதைரியம் வாய்ந்தவர், தற்போதைய பின்னடைவிலிருந்து பூரண குணம் அடைந்து வந்து மீண்டும் மக்கள் பணியாற்றுவார் என்றும், தமிழக மக்களின் பிரார்த்தனை, அவரை மீட்கும் எனவும் முதலமைச்சர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிராத்திப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close