[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

ஒருவேளை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டால்... மறக்காமல் இதை செஞ்சுருங்க..!

flood-awareness-for-public

கடந்த ஆண்டு டிசம்பர் 1- ஆம் தேதியன்று தொடங்கிய கனமழை சென்னை மட்டுமின்றி பல இடங்களை வெள்ளத்தால் புரட்டி போட்டது. சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் சென்னையை மழையும் வெள்ளமும் சூழும் நிலைமை ஏற்படுமா என்ற அச்சம் பொதுமக்கள் ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் ஏழை முதல் பணக்காரன் வரை உண்ண உணவின்றி தவித்த அவலநிலை நேர்ந்தது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு நேர்ந்தால் என்ன செய்வது என்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காண்போம்.

* பொதுமக்கள் பிரட், பிஸ்கட், பழங்கள், குடிநீர் போன்ற உணவு பொருள்களை அதிகளவு இருப்பு வைத்தல் நல்லது.
* வானொலி, தொலைக்காட்சியைத் தொடர்ந்து கவனித்து வானிலை அறிவிப்பு குறித்த செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
* தங்களிடம் உள்ள குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ்கள், மின்சார அட்டை ஆகியவற்றை உயரமான இடங்களில் பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும்.
* மிக தாழ்வான பகுதிகளிலும், கடற்கரையோர பகுதிகளிலும் உள்ள மக்கள் நீர் சூழ்வதற்கு முன்னரே மேடான பகுதிக்கு விரைவாக வெளியேற வேண்டும்.
* குழந்தைகள், முதியோருக்குத் தேவையான உணவுப் பொருள் மற்றும் மருந்து பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்திருத்தல் நல்லது.
* வெள்ளம் சூழ்வதால் பாம்பு, பூச்சிகள் போன்றவை நீரில் வரவும் கடிக்கவும் வாய்ப்புள்ளதால் பூச்சி மருந்து பொருட்களை கையாள்வது நல்லது.
* மழை நேரங்களில் அநாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்கள், துணி போன்றவற்றை மூட்டையாக கட்டி உயரமான இடங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
* மின்சாரம் நிறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதால் மோட்டார் மூலம் தற்போதே தேவையான நீரை சேமித்து வைக்கலாம். மற்றும் மொபைல், கொசு பேட், டார்ஜ் லைட் போன்ற மின்சாதன பொருட்களுக்கு சார்ஜ் செய்து வைத்து கொள்ளலாம்.
* தமிழக அரசு வெளியிட்டுள்ள அவசர உதவி எண்களை குறித்துவைத்து கொள்ள வேண்டும்.
* மோட்டார் மற்றும் கார் போன்ற வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் வைப்பது நல்லது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close