[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

நெருங்கும் 'நாடா' புயல்... பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..!

nada-storm-look-out-for-awareness-to-the-public

புயல் மற்றும் மழையால் அ‌சம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, வீட்டிற்கு வெளியே மற்றும் வ‌யல்வெளிகளுக்கு செல்லும் போதும் மின் கம்ப‌ம் மற்றும் மின் ஓயர்கள் சேதமடைந்து கீழே உள்ளதா என கவனிக்க வேண்டும். மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெ‌ட்டிகளில் மின் பொறி தென்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.

மழை மற்றும் காற்றின் போது குழந்தைகளை மின் கம்பம் அருகில் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைநீரில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட மின் உபகரணங்கள் நனைந்தால் பரிசோதித்த பிறகே பயன்படுத்த வேண்டும். ஈரமான சுவர்களில் மின்கசிவு இருந்தால் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும்‌ எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவுறுத்தியுள்‌ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close