[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

கிறிஸ்தவர்களின் புனித பயணம்... நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

government-sponsored-for-christians-pilgrimage

சென்னை மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசு வழங்கும், 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவியைப் பெ‌ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நிதியுதவி தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்தோ, அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ விண்ணப்பங்களை பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் சென்னை, அண்ணாசாலையில் உள்ள சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குனருக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close