[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

சைதாப்பேட்டை- கிண்டி இடையே தண்டவாளத்தில் பழுது.. பயணிகள் அவதி

railway-track-repaired-between-chennai-saidapet-guindy

சென்னை சைதாப்பேட்டை- கிண்டி இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக ரயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை- கிண்டி இடையேயான தண்டவாளத்தில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் அனைத்தும் கிண்டியில் நிறுத்தப்பட்டுள்ளன. பழுதை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே சென்னை புறநகர் ரயில்கள் 30 நிமிடம் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் பெரும்பாலோனார் மின்சார ரயிலில் பயணிகின்றனர். தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக ரயில்கள் குறித்த நேரத்தில் புறப்பட தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close