[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

நாகையில் 17-ஆம் நூற்றாண்டு டேனிஷ் காலப் பொருட்கள், நாணயங்கள் கண்டுபிடிப்பு

17-th-century-danish-period-coins-items-many-found-on-nagapattinam-district

நாகை மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டேனிஷ் காலத்துப் பொருட்கள், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியிலிருந்து மேற்கே, 2கி.மீ தொலைவில் சாத்தங்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த ஊர் மக்கள் ஆடுமாடுகள் மேய்ப்பதற்கும், தானியங்களை உலர்த்துவதற்கும் பயன்படுத்தி வந்த இடத்தில், பழைய கட்டுமான படிக்கட்டுகளுடன் கூடிய இரண்டு குளங்கள் அவற்றிற்கு நீர் வரும் பாதை, வெளியேறும் பாதை, பெரிய அளவிலான செங்கல் கற்கள், சுமார் 10-அடி சீரான இடைவெளியில் அமைந்துள்ள வட்ட மற்றும் சதுர வடிவிலான பெரிய தூண்களின் எஞ்சிய பகுதிகள், ஆகியவை முட்புதர்களால் சூழப்பட்டு காணப்பட்டன. இதுபற்றி ஊர் இளைஞர்கள் அளித்த தகவலின் பேரில், தரங்கம்பாடி தொல்லியல் துறை காப்பாட்சியர் பாஸ்கரன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள், முதல்கட்ட ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய‌ ஆய்வில் 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த டேனிஷ் காலத்துப் பொருட்கள், நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில் ‘இங்கு மிகப்பெரிய மாளிகை தோட்டங்களுடன் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், புகைபிடிப்பதற்கு உரிய கருவிகள், ஓவியம் தீட்டப்பட்ட பீங்கான் பாத்திரங்கள், டேனிஷ் காலத்தை சேர்ந்த சிறிய அளவிலான நாணயங்கள், திராட்சைத் தோட்டம் ஆகியவைகள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

திராட்சைத் தோட்டம் இருந்த காரணத்தினாலேயே தரங்கம்பாடி திராட்சை என்ற திராட்சை இன்றும் புழக்கத்தில் உள்ளதாகவும், அப்பகுதியைச் சார்ந்த வயதானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ள தொல்லியல் துறை அதிகாரிகள், விரைவில் மிகப்பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close