[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொடுமைப்படுத்தியே வாக்குமூலம் பெற்றனர்.... நளினி குற்றச்சாட்டு

rajiv-gandhi-murder-case-nalini-accusation-on-cbi-police

ராஜீவ் கொலை வழக்கில் தேவையின்றி கணவரையும் தன்னையும் சி.பி.ஐ இணைத்து விட்டதாகவும், சி.பி.ஐ அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்தியே வாக்குமூலம் பெற்றதாகவும் நளினி கூறியிருக்கிறார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் நளினி, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தியுடனான சந்திப்பு குறித்து எழுதியிருக்கும் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா- நளினி சந்திப்பும்” என்ற அந்தப் புத்தகத்தை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட நளினியின் தாயார் பத்மாவதி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த புத்தகத்தில், ராஜீவ் கொலை வழக்கில் தேவையின்றி கணவரையும், தன்னையும் சி.பி.ஐ இணைத்து விட்டதாகவும், சி.பி.ஐ அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்தியே வாக்குமூலம் பெற்றதாகவும், நளினி கூறியிருக்கிறார்.

எந்த பெண்ணாவது கருவுற்றிருக்கும்போது அதிர்ச்சிகரமான சம்பவங்களில் ஈடுபடுவாரா? என்றும் நளினி வினவியிருக்கிறார். வழக்கு விசாரணையின் உண்மை தன்மையை முழுவதுமாக அறிய பிரியங்கா விரும்பியிருக்கலாம் என்றும், தன்னை சந்திப்பதன் மூலம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்பியிருக்கலாம் என்றும், நளினி புத்தக‌த்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close