[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

அரசு மருத்துவமனை அலட்சியம்... நீர்க்கட்டியை கர்ப்பமாகக் கருதி 8 மாதங்கள் சிகிச்சை அளித்த அவலம்

chennai-govt-hospital-gives-pregnancy-treat-to-lady-suffer-with-cyst-in-the-the-stomach

சென்னை அரசு மருத்துவமனையில் கருத்தரித்திருப்பதாகக் கூறி கடந்த 8 மாதங்களாக சிகிச்சையளிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் நீர்க்கட்டி இருந்தது, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் காட்டிய அலட்சியமே இதற்குக் காரணம் என பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் திருமணமாகி 7 ஆண்டுகள் கடந்தும் குழந்தைப் பேறு இல்லாமல் தவித்த ஹசீனா பேகம், கருத்தரித்திருப்பதாக சென்னை கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் கூறினர். இதனால், அவரது குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. கடந்த 8 மாதங்களாக கர்ப்பிணிக்கான சிகிச்சை பெற்றுவந்த ஹசினாவுக்கு, கடந்த மாதம் வளைகாப்பும் நடத்தப்பட்டுள்ளது.

குடும்பமே குழந்தையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த வேளையில், ஹசீனாவுக்கு கடந்த வாரம் கடுமையான வயிற்று வலி ஏற்படவே உறவினர்கள், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஹசீனாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் இருப்பது குழந்தை அல்ல; நீர்க்கட்டிதான் என்று கூறியதும் குடும்பமே அதிர்ச்சியடைந்தது. அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்து, நீர்க்கட்டி இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், தரக்குறைவாக பேசியதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கடந்த 8 மாதங்களாக சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள், நீர்க்கட்டியை கண்டறியாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, அதிக அளவில் மக்கள் வருவதால் அத்தகைய தவறு நேரிட்டிருக்கலாம் என்று விளக்கம் தந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close