[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

செந்தில் பாலாஜியின் அரசியல் பாதை

aiadmk-winning-candidate-senthilbalaji

அரவக்குறிச்சி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றுள்ள செந்தில் பாலாஜியின் அரசியல் பாதையை பார்க்கலாம்.

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்த செந்தில் பாலாஜியின் இயற்பெயர் செந்தில் குமார். நியூமராலஜிபடி தனது பெயரில் குமாரை நீக்கிவிட்டு பாலாஜியைச் சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்ட அவர், முதலில் மதிமுகவில் இணைந்தார். ஒன்றியக் கவுன்சிலராக இருந்த அவர், பின்னர் திமுகவில் சேர்ந்தார்.

கடந்த 2000 ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு தொடக்கத்தில் மாணவர் அணி பொறுப்பும் சில ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் கரூர் எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த இவர், அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் மணல் கொள்ளையை எதிர்த்து கரூரில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

கரூரில் 2011ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா. தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தது, கட்சியில் அவருக்கிருந்த செல்வாக்கை உணர்த்தியது. ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் பதவியிலிருந்தும், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். கடந்த மே மாத சட்டப்பேரவைத் தேர்தலில், செந்தில் பாலாஜிக்கு கரூர் தொகுதிக்குப் பதிலாக அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டபோது, மீண்டும் வாய்ப்பை பெற்ற செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close