[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

மூன்று தொகுதிகளிலும் 'முரசை' முடக்கிய 'தாமரை'

by-polls-bjp-secures-3rd-place

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேமுதிக.,வை பின்னுக்குத்தள்ளி பாஜக 3ம் இடத்தை கைப்பற்றியுள்ளது.

அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளிலும் அதிமுக, திமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக, இன்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதலே 3வது இடத்தைப் பிடித்தது பாஜக. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக விஜயகாந்த் போட்டியிட திட்டமிட்டிருந்த திருப்பரங்குன்றத்திலும் தேமுதிக.,வை பாஜக பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதற்கு காரணம் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக மும்மரமாக களப்பணி ஆற்றி வரும் கட்சியாக பாஜக இருப்பதுவே ஆகும். மேலும், மோடி ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்ற விவகாரம் இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில், அவற்றை தவிடு பொடியாக்கி முன்னேறியுள்ளது.

பாஜகவை பொறுத்தவரை, கடந்த மக்களவை தேர்தலின் போது தமிழகத்தின் பிரதான கட்சியான திமுக ஒரு தொகுதியைக்கூட பெறாத நிலையில், பாஜக கன்னியாகுமரியில் வெற்றி பெற்று தமது செல்வாக்கை நிரூபித்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் மேற்கு மண்டலத்தில் கணிசமான வாக்கு சதவிகிதத்தைப் பெற்று தனது இருப்பை பதிவு செய்தது. இன்று நடைபெற்ற மூன்று தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என பாஜக பெயர் வாங்கியுள்ளது.

கடந்த சட்டமன்றத்தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்ததையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால் தொண்டர்கள் சோர்வுற்று களப்பணி ஆற்றுவதை தவிர்த்து வருகின்றனர். இன்று வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகள் தேமுதிக தம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவே அமைந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close